Videos

Fundamental rights - Indian constitution Important Notes

அடிப்படை உரிமைகள் - Indian constitution Important Notes | TNPSC Online Study

TNPSC Indian constitution Important Notes in Tamil. Fundamental rights - அடிப்படை உரிமைகள். Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF
 
Fundamental rights - அடிப்படை உரிமைகள் அடிப்படை உரிமைகள் - Indian constitution Important Notes | TNPSC Online Study

அடிப்படை உரிமைகள்


  • அடிப்படை உரிமைகள் என்பவை ஒரு நாட்டு குடிமக்கள் சுதந்தரத்துடனும், விருப்பத்துடனும் வாழ வழங்கப்படும் ஆதார உரிமைகள்,
  • அடிப்படை உரிமைகள் ஓர் அரசின் தன்னிச்சையான அதிகாரத்தில் இருந்து குடிமக்களைப் பாதுகாப்பவை.
  • அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது மக்கள் தீர்வு வேண்டி நீதிமன்றத்தை நாடலாம்.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புகள் 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றியவை.
  • அடிப்படை உரிமைகள் அரசு அதிகாரத்தைக் கட்டுபடுத்துவதால் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 12, 'அரசு' எது என வரையறுக்கிறது.
  • அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 13 அடிப்படை உரிமைகளுக்கு முரண்படும் சட்டங்களை விளக்குவதோடு, அவ்வாறு முரண்படும் சட்டங்கள் செல்லாதவையாகும் என்றும் குறிப்பிடுகிறது. மேலும், இவ்வுறுப்பு சீட்டம் எது எனவும் வரையறுக்கிறது.
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14 முதல் 32 வரையான உறுப்புகள் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு) அடிப்படை உரிமைகள் பற்றியவை.
  • 11-22 சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய உரிமை, 14-18 கலாசார மற்றும் கல்வி உரிமை, அரசமைப்புச் சட்டத் தீர்வு உரிமை என்பனவே ஆறு அடிப்படை உரிமைகள்.
சமத்துவ உரிமை 14-18

  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புகள் 14 முதல் 18 வரை சமத்துவ உரிமை பற்றியவை.
  • 14-வது உறுப்பு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் சட்டத்தின் சம பாதுகாப்பையும் விளக்குகிறது.
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்து இங்கிலாந்திலுள்ள சட்டத்தின் ஆட்சி என்பதிலிருந்து வந்ததாகும்.
  • சட்டத்தின் சம பாதுகாப்பு என்ற கோட்பாடு அமெரிக்காவின் 14-வது அரசியல் சட்டத் திருத்தத்திலிருந்து பெறப்பட்டது
  • இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது உறுப்பு, சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகிய காரண அடிப்படையில் மக்கள் வேறுபடுத்தப்படுவதை தடை செய்கிறது.
  • 15-வது உறுப்பின் உட்பிரிவு (3), பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு வரைமுறைகளை கொண்டுவர அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • 15-வது உறுப்பின் உட்பிரிவு (4), சமூக மற்றும் கல்வி வழி பின்தங்கிய மக்களின் மேம்பாட்டுக்கான சிறப்பு செயல்வகைகளை செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • 15-வது உறுப்பின் உட்பிரிவு (4), 1951 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட முதல் சட்ட திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டதாகும்.
  • 15-வது உறுப்பின் உட்பிரிவு (5), சமூக மற்றும் கல்வி வழி பின்தங்கியவருக்கு உயர்கல்வி நிறுவனச் சேர்க்கையில் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.
  • 15-வது உறுப்பின் உட்பிரிவு (5), 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 93-வது சட்டத் திருத்தத்ததின்படி சேர்க்கப்பட்டதாகும்.
  • உறுப்பு 16 (1), அரசாங்க வேலை வாய்ப்பில் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சம வாய்ப்பை உறுதிசெய்கிறது
  • உறுப்பு 16(2). அரசுப்பணிகளில் சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் மரபுவழி, குடியிருப்பு ஆகிய காரணங்களில் ஒன்றைக் கொண்டு வேற்றுமைப்படுத்துவதை தடைசெய்கிறது.
  • உறுப்பு 16 உட்பிரிவு (1), (2)-ல் சொல்லப்பட்டவற்றுக்கான விதிவிலக்குகள் உட்பிரிவு (3),(4),/(5)-ல் இடம்பெறுகின்றன.
  • உறுப்பு i6 (3), சில பதவிகளுக்கு குடியிருப்பு தகுதியை எந்தளவுக்கு நிர்ணயிக்கலாம் எனத் தீர்மானிக்கும் சட்டமியற்ற பாராளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கிறது.
  • 16-வது உறுப்பின் உட்பிரிவு (4), அரசுப் பணிகளில் போதுமான அளவுக்கு இடம்பெறாத, சமூக மற்றும் கல்வி நிலையில் பின்தங்கிய வகுப்பினருக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்கிறது.
  • உறுப்பு 16 (4A), தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வுகளில் இட துக்கீடு வழங்க வழிவகை செய்கிறது (77-வது சட்டத் திருத்தம், 1995).
  • உறுப்பு 16 (4B), தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத பணியிடங்களை முன்னெடுத்துச் செல்ல வழிவகை செய்கிறது. (81-வது சட்டத் திருத்தம், 2000)
  • உறுப்பு 16 (5), மதம் சார்ந்த அரசு நிறுவன பதவிகளுக்கு அந்தந்த மதத்தினரை நியமிக்க அனுமதியளிக்கிறது.
  • 17-வது உறுப்பு, தீண்டாமை ஒழிப்பு பற்றியதாகும்.
  • 18-வது உறுப்பு, பட்டங்களைத் துறப்பது தொடர்பானது.

சுதந்திர உரிமை


  • 19 முதல் 22 வரையிலான உறுப்புகள் சுதந்திர உரிமை பற்றியவை.
  • 19-வது உறுப்பு,ஆறுவித சுதந்திர உரிமைகளை வழங்குகிறது.
  • பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கங்கள் அமைக்கும் உரிமை, இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமை, இந்தியாவில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வசிக்கும் உரிமை, எந்தத் தொழிலையும், வணிகத்தையும் செய்யும் உரிமை.
  • உறுப்பு 19-ன் கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகள் கட்டுப்பாடற்ற அடிப்படை உரிமைகள் அல்ல. 
  • நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு, பொது ஒழுங்கு ஆகியவற்றைக் கருதி, தக்க வரையறைக்குட்பட்ட பேச்சுரிமையும் கருத்துரிமையும் வழங்கப்பட்டுள்ளன.
  • உறுப்புகள் 20 மற்றும் 22, குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கான பாதுகாப்பு பற்றியது.
  • உறுப்பு 20 எந்தக் குற்றவாளியும் குற்றம் செய்த காலத்தில் நடைமுறையில் இல்லாத சட்டங்களின் கீழ் தண்டிக்கப்படுவதைத் தவிர்த்தல் (Ex post facto legislation). ஒரு குற்றத்துக்கு ஒருமுறை மட்டுமே தண்டணை அளிப்பதன் மூலம் இரட்டை இடர்பாட்டை (Double jeopardy) தடுத்தல், தன்னைத்தானே குற்றம்சாட்ட வற்புறுத்துதலைத் தடுத்தல் ஆகியவைப் பற்றியது. (self incrimination) 
  • உறுப்பு 21, வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திர பாதுகாப்பு பற்றியது.
  • உறுப்பு 21 A (86-வது சட்டத் திருத்தத்தின்படி சேர்க்கப்பட்டது), 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கல்வியை அடிப்படை உரிமையாக்கியது. 
  • உறுப்பு 22, வழக்குகளில் கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்கிறது.

சுரண்டலுக்கு எதிரான உரிமை


  • உறுப்புகள் 23 மற்றும் 24 சுரண்டலுக்கு எதிரான உரிமை பற்றியவை.
  • உறுப்பு 23 மனித இழிதொழில் வணிகம் மனிதர்களை விற்றல், வாடகைக்கு விடுதல் போன்றவை) மற்றும் ஒருவரை ஊதியமின்றி கட்டாய உழைப்புக்கு உடபடுத்துதல் ஆசியவற்றைத் தடைசெய்கிறது.
  • உறுப்பு 24, தொழிற்சாலைகளில் 14 வயதுகுட்பட்ட சிறார்களை அபாயகரமான தொழில்களில் அமர்த்துவதைத் தடை செய்கிறது.
சமய சுதந்திரத்துக்கான உரிமை

  • உறுப்புகள் 25 முதல் 28 வரை சமய சுதந்திர உரிமை குறித்து குறிப்பிடுகின்றன. 
  • உச்ச நீதிமன்றம் (ஸ்டைனிஸ்லஸ் வழக்கில் (1977) மதத்தைப் பரப்புதல் என்பது மதமாற்றத்தை உள்ளடக்காது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
  • உறுப்பு 25. ஒரு சமயத்தை வெளிப்படையாக ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் (to profess, practice and propagate) ஒருவருக்கு உரிமை அளிக்கிறது.
  • மேலும் உறுப்பு 25, ஒருவர் சில நம்பிக்கைகளையும், கோட்பாடுகளையும் ஏற்று பின்பற்றுவதற்கான மனச்சான்று சுதந்திரத்தையும் (Freedom of conscience) அளிக்கிறது.
  • உறுப்பு 26, சமய நிறுவனங்கள் நிறுவுவதற்கும், பேணுவதற்குமான உரிமையை வழங்குகிறது.
  • உறுப்பு 27, சமய மேம்பாட்டுக்காக வரிவிதிப்பதைத் தடை செய்கிறது. 
  • உறுப்பு 28, கல்விக்கூடங்களில் சமய போதனை கூடாது என வலியுறுத்துகிறது

கலாசார மற்றும் கல்வி உரிமைகள்


  • உறுப்பு 29, சிறுபான்மையினர். தமது சொந்த மொழி, எழுத்து வடிவம் மற்றும் கலாசாரத்தை பாதுகாத்துக்கொள்ள உரிமை அளிக்கிறது.
  • உறுப்பு 30, கல்விக்கூடங்கள் அமைக்கவும், நிர்வாகிக்கவும் சமய மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு உரிமை அளிக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.