அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமை மற்றும் நீதிப் பேராணை (WRITS) - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமை மற்றும் நீதிப் பேராணை (WRITS). Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
அரசமைப்பு தீர்வழிகளுக்கான உரிமை மற்றும் நீதிப் பேராணை (WRITS)
- இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் உறுப்பு 32-ல் அளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு தீர்வு அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் நீதிப் பேசாணை வழங்குகிறது.
- அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்ற போது, ஓர் இந்திய குடிமகன் உச்ச 5 நீதிமன்றத்தை அணுகினால் ஐந்து நீதிப் பேராணையில் எதேனும் ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்குகிறது.
- ஆட்கொணர் நீதிப் பேராணை (Writ of Habeas Corpus)
- செயலுறுத்தும் நீதிப் பேராணை (Writ of Mandamus)
- நெறிப்படுத்தும் நீதிப் பேராணை (Writ of Certiorari)
- தகுதி வினவும் நீதிப் பேராணை (Writ of Prohibition)
- தடைசெய்யும் நீதிப் பேராணை (Writ of Quo Warranto)
- ஆட்கொணர் நீதிப் பேராணை: ஒருவரை சட்டத்துக்கு புரம்பாக கைது செய்வதை தடை செய்வதே ஆட்கொணர் நீதிப் பேராணையின் நோக்கம்.
- Writ of Habeas Corpus - என்பதற்கு 'ஆளைக் கொண்டுவா' என்பது பொருள்.
- இந்த ஆணை வழங்கப்பட்டால் 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டவர் நீதி மன்றத்தின் முன்பு கொண்டுவரப்பட வேண்டும்.
- தகுதி வினவும் நீதிப் பேராணை தகுதியுள்ள ஒருவருக்கு வேலை வழங்கப்படாத போது, அதற்கான காரணங்களைக் கோரி பொது அமைப்பு ஒன்றுக்கு வழங்கப்படும் நீதிப் பேராணை.
- தகுதியற்றவர்கள் பொதுப் பதவிகளை பெறுவதைத் தடுக்கும் போக்கில் அமைவது Quo Warranto - என்பதற்கு 'தங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது' என்பது பொருள்.
- நெறிப்படுத்தும் நீதிப் பேராணை ஒரு கீழ் நீதிமன்றமோ ஒரு பொது நிர்வாகியோ முறைதவறி செயல்படும்போது அவரை நெறிப்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்குகிறது.
- தடைசெய்யும் நீதிப் பேராணை-கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைப்பதற்காக உச்ச நீதிமன்றம் வழங்குகிறது.
- நீதிப் பேராணை அதிகாரத்தைப் பொருத்தமட்டில், உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் உச்ச நீதிமன்ற அதிகாரத்தை விட பரந்தது
- உச்ச நீதிமன்றத்தின் நீதிப் பேராணை அதிகாரம் (உறுப்பு 32) அடிப்படை உரிமை பாதிக்கப்படும்போது மட்டுமே தீர்வளிக்கவல்லது.
- உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை அதிகாரம் (உறுப்பு 226 அடிப்படை உரிமைகளை மீட்டுமின்றி சாதாரண சட்ட உரிமைகளையும் உள்ளடக்கியது
பொது நல வழக்குகள்
- பாதிக்கப்பட்டவருக்குத்தான் வழக்கிடு உரிமை (locusstandi) உண்டு என்ற பாரம்பரிய நீதிமுறையை மாற்றி, பாதிக்கப்பட்டவர் ஏழ்மை அல்லது இயலாமை காரணமாக நீதிமன்றத்தை அணுகத் தயங்கும் நிலையில், அவர் சார்பில் பொது நல நாட்டமுள்ள எவரும் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற கருத்தின்படி அமைபவையே வழக்குகள் பாது நல
- பொது நல வழக்குகள் என்ற கருத்தாக்கம் அமெரிக்காவில் தொடங்கியது.
- இந்தியாவில் பொது நல வழக்குகள் என்ற கருத்தாக்கம் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகளான நீதியரசர்கள் வி.ஆர்.கிருஷ்ணய்யர், பி.என். பகவதி போன்றவர்களால் மலர்ச்சி பெற்றது.
- பாரதிய சோஷித் கரம்சாரி சங் வழக்கு, பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கு, ஹுசைனரா கார்ட்டூன் வழக்கு போன்றவை இந்தியாவில் நடைபெற்ற முக்கிய பொது நல வழக்குகள்.
- பாரதிய சோஷித் கரம்சாரி வழக்கில் (1981), அரசு நிறுவனமான ஓர் உரத்தொழிற்சாலை பழைய இயந்திரங்களை விற்க முற்பட்டதற்கு, அங்கீகரிக்கப்படாத ஒரு தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த எதிர்ப்பு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரால் பிரநிதித்துவ நடவடிக்கையாக (representative proceeding) ஏற்கப்பட்டது.
- நீதிபதிகள் இடமாற்றம் தொடர்பான எஸ்.பி.குப்தா வழக்கில், 'சட்ட மீறல் காரணமாக பொது ஊறு ஏற்பட்டால், போதுமான நாட்டமுள்ள பொதுமக்கள் யாரும் வழக்குத் தொடரலாம்" என்று நீதியரசர் பி.என்.பசுவதி குறிப்பிட்டுள்ளார். பத்துவா முக்தி மோர்ச்சா வழக்கில் (1984), ஒரு தன்னார்வ இயக்கத்தின் முயற்சியால் கொத்தடிமைத் தொழிலாளர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.
- ஆண்டுக்கணக்கில் விசாரணை இன்றி பீகார் சிறை ஒன்றில் வாடிய கைதிகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு கட்டுரை வெளியானது. அதை அடிப்படையாகக் கொண்டு, கபிலா ஹிங்ரோணி என்ற வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கே ஹுசைனரா கார்ட்டூன் வழக்காகும்..
- பொது நல வழக்கு என்பது சர்வரோக நிவாரணி அன்று; மிக கவனத்துடனும் விழிப்புடனும் கையாளப்பட வேண்டிய படைக்கலன் என்று ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- பொது நலன் என்ற அழகான முகத்திரையில் வன்மம், தன்னலம், காழ்ப்பு உணர்ச்சி, விளம்பரம் தேடும் மனோபாவம் போன்ற அருவருப்பான உள் நோக்கங்கள் மறைந்துள்ளனவா என்பது கவனத்துடன் நோக்கப்பட வேண்டும் என்று மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- பொது நல வழக்குகள் கொடுமைக்குள்ளாக்கப்படுவோரின் பொது நலனைப் பாதுகாக்கவே உரியது; தனிப்பட்டவரின் நலனைப் பாதுகாக்க அல்ல என்று வேறொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- பொது நல வழக்கு தொடுத்தவர் தன் மனம்போன போக்கில் அதை விலக்கிக் கொள்ளவோ நிபந்தனை விதிக்கவோ கூடாது என்று ஜி.டி.மேனேஜிங் கமிட்டி வழக்கில் (2004) உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் அதிகாரப் பிரிவினை
- மன்னர் ஆட்சிக்காலத்தில் நாட்டின் மன்னரே சட்டம் இயற்றி அதை நிர்வாகித்து, நிர்வாகிக்கும்போது ஏற்படும் குறைகளைக் களைந்து நீதி வழங்கி வந்தார்.
- சட்டம் இயற்றும் அதிகாரம் (Legislative Power) அந்தச் சட்டத்தை நிர்வாகிக்கும் அதிகாரம் (Executive Power) நீதித் துறை அதிகாரம் (Judicial Power) ஆகிய 1.மூன்று மூன்றும் வெவ்வேறு அமைப்புகளில் இருக்க வேண்டும் என்பதே அதிகாரப் பிரிவினை கோட்பாடாகும்.
- மக்களாட்சி முறையில் அதிகாரப் பிரிவினை மிக முக்கிய அம்சமாகும்.
- அதிகாரப் பிரிவினை கோட்பாடு முதன் முதலாக மாண்டஸ்க்யு என்பவரால் சட்டங்களின் உணர்வு (Sprits of Law) என்ற புத்தகத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்திய மத்திய அரசாங்கம் - அதிகாரப் பிரிவினை
- மத்திய சட்டமியற்றும் அமைப்பு - லோக்சபா, ராஜ்யசபா.
- மத்திய நிர்வாக அமைப்பு - குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சரவை.
- மாநில அரசாங்கம் அதிகாரப் பிரிவினை -
- மாநில சட்டமியற்றும் அமைப்பு சட்டசபை, சட்டமேலவை
- மாநில நிர்வாக அமைப்பு ஆளுநர், முதலமைச்சர், மாநில அமைச்சரவை.
- மாநில நீதி அமைப்பு உயர் நீதிமன்றம்.
- தற்போது இந்தியாவில் மாநிலங்களில் சட்டமேலவை உள்ளன.
- அவை பீகார், ஜம்மு காஷ்மிர், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா.
- தமிழ் நாட்டில் சட்டமேலவை 1986ல் கலைக்கப்பட்டது. - தமிழ் நாட்டில் சட்டமேலவையின் கடைசி தலைவர் ம.பொ.சிவஞானம் (சிலம்பு செல்வர்). -2016
- 1957 முதல் 2005 வரை நடைபெற்ற பத்து பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழ் நாட்டின் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கலைஞர் மு.கருணாநிதி.