இந்தியாவில் அதிகார பகிர்மானம் - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. இந்தியாவில் அதிகார பகிர்மானம். Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
இந்தியாவில் அதிகார பகிர்மானம்
- இந்தியா ஓர் அரை குடியாட்சி நாடாகும் (Quasi Federal).
- இந்திய கூட்டாட்சிமுறை கனடாவின் கூட்டாட்சிமுறையை அடிப்படையாகக் கொண்டது.
- இந்திய கூட்டாட்சியில் மத்திய மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள அதிகாரப் பட்டியல் ஏழாம் அட்டவணையில் இடம் பெற்றுள்ளது.
- ஏழாம் அட்டவணையில் மத்தியப் பட்டியல் (Union List), மாநில பட்டியல் (State List), பொதுப் பட்டியல் (Concurrent List) என்ற மூன்று பட்டியல்கள் இடம் பெற்றுள்ளன.
- 99 துறைகள் கொண்ட மத்தியப் பட்டியல் - ரயில்வே, பாதுகாப்பு, தபால், வருமானவரி, சுங்கம் மற்றும் கலால் வரி உள்ளிட்டவை அடங்கும்.
- 61 துறைகள் கொண்ட மாநில பட்டியல் நில வருவாய், விற்பனை வரி, கேளிக்கை - வரி, விவசாய வருமான வரி, உள்ளிட்டவை அடங்கும்.
- 52 துறைகள் கொண்ட பொதுப் பட்டியல் கல்வி, நலவாழ்வு, சமூக நலம் உள்ளிட்டவை அடங்கும்.
- மத்தியப் பட்டியலில் உள்ள துறைகளில் பாராளுமன்றமும், மாநில பட்டியலில் உள்ள துறைகளில் மாநில சட்டமன்றங்களும் சட்டம் இயற்றலாம்.
- பொதுப் பட்டியல் உள்ள துறைகளில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களும் ஆகிய இரண்டுமே சட்டம் இயற்ற முடியும். மாநில சட்டம் ஒன்று மத்தியச் சட்டம் ஒன்றுக்கு முரண்படும்போது மத்தியச் சட்டமே செல்லுபடியாகும்.
- மாநிலங்களவை கேட்டுக்கொண்டால் நாடாளுமன்றம் மாநில பட்டியல் துறைகளிலும் சட்டமியற்ற இயலும்.
- மத்திய, மாநில, பொதுப் பட்டியல்களில் இல்லாத புதுத் துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உண்டு. இந்த அதிகாரம் எச்ச அதிகாரம் (Residuaty Power) எனப்படும்.
- எச்ச அதிகாரத்தின் அடிப்படையில் ஏற்றப்பட்ட சட்டத்தின் மூலம்தான் மத்திய அரசு சேவை வரியை விதிக்கிறது.
யாருக்கு எந்த அதிகாரம் ?
- இந்திய அரசின் தலைவர் குடியரசுத் தலைவர்.
- இந்தியாவின் முதல் குடிமகன் குடியரசுத் தலைவர்
- முப்படைகளின் தளபதி - குடியரசுத் தலைவர்
- மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடர்கள் தொடங்கும், முடிவடையும் காலத்தை அறிவிப்பவர் - குடியரசுத் தலைவர்.
- இந்திய அரசாங்கத்தின் தலைவர் - பிரதமர்.
- அமைச்சரவையின் தலைவர் பிரதமர்.
- அமைச்சரவைக் கூட்டத்துக்கு தலைமை வகிப்பவர் - பிரதமர்.
- திட்டக்குழு, தேசிய ஒருமைபாட்டுக் கவுன்சில் இவற்றின் தலைவர் - பிரதமர்
- லோக்சபாவின் தலைவர் சபாநாயகர் (மக்களவைத் தலைவர்). -
- ராஜ்யசபாவின் தலைவர் குடியரசுத் துணைத்தலைவர். லோக்சபா, ராஜ்யசபா கூட்டுக்கூட்டத்துக்கு தலைமை வகிப்பவர் மக்களவைத் தலைவர்.
- லோக்சபா, ராஜ்யசபா கூட்டுக்கூட்டத்துக்கு மக்களவைத் தலைவர் இல்லாதபோது மக்களவைத் துணைத்தலைவர் தலைமை ஏற்பார். அவரும் இல்லாதபோது ராஜ்யசபா துணைத்தலைவர் தலைமை ஏற்பார்.
- புதிய அகில இந்திய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடையது ராஜ்யசபா.
- பண மசோதாவை லோக்சபாவில் மட்டுமே அறிமுகப்படுத்தமுடியும்
- ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என முடிவு செய்யும் அதிகாரமுடையவர் மக்களவைத் தலைவர்.
பதவிகளுக்கான வயது வரம்புத் தகுதி (குறைந்தபட்சம்)
- குடியரசுத் தலைவர் : 35
- ஆளுநர்: 35
- லோக்சபா உறுப்பினர்: 25
- ராஜ்யசபா உறுப்பினர்: 30
- சட்டமன்ற உறுப்பினர்: 25
- சட்டமேலவை உறுப்பினர்: 30
- பஞ்சாயத்து உறுப்பினர்: 21
பதவிகளும் ஓய்வு பெறும் வயதும்
- உயர் நீதிமன்ற நீதிபதி : 62
- உச்ச நீதிமன்ற நீதிபதி : 65
- தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
- தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
- மத்திய பணியாளர் தேர்வாணைக்குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
- மாநில பணியாளர் தேர்வாணைக்குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது.