இந்திய குடியரசுத் தலைவர் தகுதியும் தேர்தலும் - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. Qualification and Election of the President of the Republic of India, இந்திய குடியரசுத் தலைவர் தகுதியும் தேர்தலும். Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
இந்திய குடியரசுத் தலைவர்
தகுதியும் தேர்தலும்
- இந்திய குடியரசுத் தலைவர் பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களைச் சார்ந்த நியமன உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
- குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒற்றை மாற்று வாக்கு முறையில் அமைந்த விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பின்பற்றப்படுகிறது.
- குடியரசுத் தலைவருக்கு நிர்வாக அதிகாரம், சட்டம் இயற்றும் அதிகாரம், நீதி அதிகாரம், மறுப்பு அதிகாரம் என பல அதிகாரங்கள் உண்டு.
நிர்வாக அதிகாரம் EXECUTIVE POWERS -
- இந்திய குடியரசுத் தலைவர் இந்திய அரசியல் தலைவராகவும், இந்திய பாதுகாப்பு படையின் உச்சநிலை கமாண்டராகவும் திகழ்கிறார்.
- குடியரசுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரை பிரதமராக நியமிக்கிறார்.
- குடியரசுத் தலைவர் பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிக்கிறார்.
- மத்திய அரசு நிர்வாகம் குடியரசுத் தலைவர் பெயரிலேயே நடைபெறுகிறது. * இந்திய தலைமை நீதிபதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
- உச்ச நீதிமன்ற நீதிபதிகளை இந்திய தலைமை நீதிபதியின் ஆலோசனைப்படி நியமிக்கிறார்.
- மாநில உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி உள்ளிட்ட அனைத்து நீதிபதிகளையும் நியமிப்பவர் குடியரசுத் தலைவரே.
- இந்திய தலைமை தேர்தல் ஆணையர், இந்திய தலைமை வழக்குரைஞர் ஆகியோரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார்.
- இந்திய தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார்.
சட்டம் இயற்றும் அதிகாரம் - LEGISLATIVE POWERS
- பாராளுமன்ற கூட்டத்தைக் கூட்டவும், மக்களவையைக் கலைக்கவும் குடியரசுத் தலைவர் அதிகாரம் பெற்றுள்ளார்.
- பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் கையெழுத்து பெற்ற பின்பே சட்டமாகும்.
- பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத நேரத்தில் கேபினெட் ஆலோசனைப்படி அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
- பண மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்ய குடியரசுத் தலைவரின் முன் அனுமதி அவசியம்
- லோக்சபாவுக்கு இருவரையும் ராஜ்யசபாவுக்கு 12 பேரையும் நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
நீதி அதிகாரம் -JUDICIAL POWERS
- குற்றவாளிகளை மன்னிக்கவோ (Pardon), அவர்களின் தண்டணை காலத்தை குறைக்கவோ (Remission), ஒரு தண்டனையை மற்றொரு தண்டனையாக மாற்றவோ (Commutation), தண்டனை நிறைவேற்றப்படும் காலத்தை தள்ளிப்போடவோ (Respite) குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. (உறுப்பு 72). (32) Mart 20 குற்றவாளிகளை மன்னிக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவர் கேபினெட் ஆலோசனைப்படியே பயன்படுத்தவேண்டும் என்று கேகார்சிங் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
- குடியரசுத் தலைவர் வழங்கும் மன்னிப்பு இரக்கத்தின் அடிப்படையிலானது. யாரும் 161 உரிமை எனக் கோர முடியாது.
- ராணுவ குற்றவாளிகளை மன்னிக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
குடியரசுத் தலைவர் மீது பழிச்சாட்டுதல்
- குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவுறும் முன்னரே பழிச்சாட்டுதல் மூலம் பதவியிழக்க நேரிடலாம். உறுப்பு 61)
- அரசமைப்புச் சட்டத்தை மீறியதற்காக மட்டுமே குடியரசுத் தலைவர் மீது பழிச்சாட்டுதல் கொண்டு வர முடியும்.
- பழிச்சாட்டுதலுக்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளில் எதில் வேண்டுமானாலும் கொண்டுவரப்படலாம்.
- பழிச்சாட்டுதலுக்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் எந்த அவையில் கொண்டுவாப்படுகிறதோ அந்த அவையில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர் ஆதரவு வேண்டும். .
- பழிச்சாட்டுதல் தீர்மானத்தைக் கொண்டுவரும் அவையில், அந்தத் தீர்மானம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டு, மறு அவைக்கு அனுப்பப்பட வேண்டும்.
- மறு அவை அந்தத் தீர்மானம் மீது விசாரணை நடத்தி மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றினால் குடியரசுத் தலைவர் பதவியிழக்க நேரிடும்.