இந்தியாவில் அதிகார பரவலாக்கம் - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. இந்தியாவில் அதிகார பரவலாக்கம். Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
இந்தியாவில் அதிகார பரவலாக்கம்
- அதிகார பரவலாக்கல் என்பது உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி அவற்றுக்கு அதிகாரத்தை அளித்தலை குறிக்கும்.
- இந்தியாவில் உள்ளாட்சி முறை (கிராம சுயாட்சி முறை) சோழர்கால நிர்வாகத்தில் மிகவும் சிறப்புற்றிருந்தது.
- சோழர்காலத்தில், கிராம மன்றங்களுக்கான உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதை உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
- இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்தில் ரிப்பன் பிரபு உள்ளாட்சி மன்றங்களை ஏற்படுத்தினார்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 40 வது உறுப்பு பஞ்சாயத்து அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது.
- 1956 ல் பல்வந்ராய் மேத்தா குழு மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை -பரிந்துரைத்தது.
- இந்தியாவில் முதன் முறையாகி 1959-ல் ராஜஸ்தான் மாநிலத்தில் பஞ்சாயத்து முறை ஆரம்பிக்கப்பட்டது.
- பின்னர் தென்னிந்தியாவில் ஆந்திராவில் பஞ்சாயத்து முறை ஆரம்பிக்கப்பட்டது.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் IX வது பகுதி மற்றும் 11, 12-வது அட்டவணைகள் மூலம் அரசியலமைப்பு அதிகாரம் பெறும் வரை (1992) நாடெங்கும் பஞ்சாயத்து அமைப்புகள் வலிமை குறைந்தே காணப்பட்டன.
- இடைக்காலத்தில் ஜனதா அரசாங்கத்தின் ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்ட அசோக் மேத்தா குழு, இரண்டடுக்கு பஞ்சாயத்து முறையையும் அரசியல் கட்சிகளே நேரடியாக பஞ்சாயத்து தேர்தல்களில் பங்குபெறுவதையும் பரிந்துரைத்தது.
- 1992 ம் ஆண்டு எல்.எம்.சிங்வி கமிட்டி பரிந்துரைப்படி பஞ்சாயத்து ராஜ் முறை அரசியலமைப்பு சட்டத்தின் IX-வது பகுதியாக கொண்டுவரப்பட்டது.
- 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் அனைத்து மாநிலங்களிலும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் இயற்றப்பட்டது.
- புதிய பஞ்சாயத்து ராஜ் முறையில் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.
- பஞ்சாயத்து அமைப்புகளுக்கு ஐந்தாண்டு பதவிக்காலம், இடையில் கலைக்கப்பட்டால் 6 மாதத்துக்குள் தேர்தல் போன்றவை புதிய பஞ்சாயத்து ராஜ் முறையின் சிறப்பு அம்சமாகும்.
- கவானரால் நியமிக்கப்பட்ட மாநில தேர்தல் ஆணையரை கொண்ட, தேர்தல் ஆணையம் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்துவதற்காக மாநிலங்களில் உள்ளது.
- பஞ்சாயத்து அமைப்புகள் சட்டம் இயற்றக்கூடிய 29 துறைகள் 11-வது அட்டவணையில் வரையறுக்கப்பட்டுள்ளன.
- பஞ்சாயத்து ராஜ் முறை சட்டத்தை கொண்டு வருவதில் ஜம்மு காஷ்மீர், மிஸோரம், மேகாலயா போன்ற மாநிலங்களுக்கு விளக்களிக்கப்பட்டுள்ளது.
- பஞ்சாயத்து ராஜ் செயல்படும் முறையை ஆராய்வதற்கு இது வரை ஏழு வட்டமேஜை மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன.
Panchayat Raj system | பஞ்சாயத்து ராஜ் முறை
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மூன்றடுக்கு பஞ்சாயத்து அமைப்பினை பற்றி கூறப்பட்டுள்ளது.
- அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பகுதி உறுப்பு 243A முதல் 2430 வரை 16 உறுப்புகளையும் II-வது அட்டவணையையும் கொண்டது.
- உறுப்பு 243A கிராம சபை பற்றியும் 243B பஞ்சாயத்து முறையையும் விளக்குகிறது.
- உறுப்பு 243D பஞ்சாயத்தில் பெண்கள், பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர் இடஒதுக்கீடு பற்றி குறிப்பிடுகிறது.
- பஞ்சாயத்துக்கான தேர்தல் பஞ்சாயத்துக்கான பதவிக்காலம் முடிவதற்குள் நடத்தப்பட வேண்டும்.
- உறுப்பு 243G பஞ்சாயத்துடன் தன்னாட்சி அமைப்புகளாக விளக்குவதற்கு சட்டமன்றங்கள் செய்ய வேண்டிய வழிவகைகள் பற்றி வலியுறுத்துகிறது.
- பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டிய வேளாண்மை, நிலமேம்பாடு, நீர்ப்பாசனம், கால்நடை வளம், சமூக காடுகள் போன்ற 29 துறைகள் 11-வது அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
- பஞ்சாயத்து தமது எல்லைக்கு வரி, தீர்வை சுங்கம், கட்டணம் போன்றவற்றை விதிக்க உறுப்பு 243H வழிகாட்டுகிறது.
- உறுப்பு 2431-ல் பஞ்சாயத்து நிதிநிலைமையை மேம்படுத்த ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில நிதி ஆணையம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- பஞ்சாயத்து தேர்தலை சிறப்பாக நடத்த மாநில தேர்தல் ஆணையரை கொண்ட மாநில தேர்தல் ஆணையம் பற்றி 243K-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பஞ்சாயத்து அமைப்பு முறை யூனியன் பிரேதசங்களுக்கு பொருந்துவது பற்றி உறுப்பு 243K-ல் குறிப்பிடுகிறது.
- பகுதி 9 எந்த பகுதிகளுக்கு பொருந்தாது என்பதை 243M எடுத்துக்காட்டுகிறது.
- பஞ்சாயத்துத் தேர்தலில் நீதிமன்றங்கள் தலையிடுவதை உறுப்பு 243O தடை செய்கிறது.
ஆட்சியியல் நிர்வாக சீர்திருத்த கமிட்டிகள்
- ஸ்வரன்சிங் கமிட்டி - அடிப்படை கடமைகள்
- பசல் அலி கமிட்டி - மொழிவாரி மாநிலங்கள்
- தார் கமிட்டி -மாநில எல்லை சீரமைப்பு
- சர்காரியா கமிட்டி -மத்திய, மாநில உறவுகள்
- ராஜமன்னார் கமிட்டி -மத்திய,மாநில உறவுகள்
- நாகநாதன் கமிட்டி - மத்திய, மாநில உறவுகள்
- இந்திரஜித் குப்தா கமிட்டி - தேர்தல் சீர்திருத்தம்
- தினேஷ் கோஸ்சுவாமி கமிட்டி - தேர்தல் சீர்திருத்தம்
- பல்வந்ராய் மேத்தா கமிட்டி - மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை.
- அசோக் மேத்தா கமிட்டி - இரண்டடுக்கு பஞ்சாயத்து முறை
- எல்.எம்.சின்வி கமிட்டி - பஞ்சாயத்து ராஜ் முறைக்கு அரசியலமைப்பு அங்கிகாரம்
- வோரா கமிட்டி - அரசியல்வாதிகளுக்கு குற்றவாளிகளுடனான தொடர்பு
- காக்கலேகர் கமிஷன் - பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான முதல் கமிட்டி
- மண்டல் கமிஷன் - பிற்படுத்தப்பட்டோர் 27% இடஒதுக்கீடு
- சச்சார் கமிட்டி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடம்
- ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி - முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு
- வேங்கடாசலய்யா கமிட்டி - அரசியலமைப்புச் சட்ட மறு ஆய்வு