Videos

இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு - வேலு நாச்சியார்

இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு - வேலு நாச்சியார்

 வேலு நாச்சியார் - அம்புஜத்தம்மாள் - கடலூர் அஞ்சலையம்மாள்

இந்திய விடுதலைப் போரில் தமிழகப்பெண்களின் பங்கு 


வேலு நாச்சியார்:

வேலு நாச்சியார் வீரமும் நுண்ணறிவும் ஒருங்கே அமையப்பெற்றவர். இவரே ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி. இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் இணையருக்குக் கி.பி.1730ஆம் ஆண்டு ஒரே பெண் மகவாகத் தோன்றியவர் வேலு நாச்சியார். இவர், பெற்றோரால் ஆண் வாரிசைப்போன்றே வளர்க்கப்பட்டு, ஆயுதப்பயிற்சிமுதல் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலு நாச்சியாரை மணந்துகொண்டார். ஆங்கிலேயர் 1772ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர் வீரமரணமடைந்தார்.

வேலு நாச்சியார், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்து, ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்துக் கலந்து பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர்அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன் அனுப்பினார். மருது சகோதரர்களுடன் வீரர்படைக்குத் தலைமையேற்றுச் சென்ற வேலு நாச்சியார் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். அப்போரில், கணவரைக் கொன்றவர்களை வென்று 1780ஆம் ஆண்டில் சிவகங்கையை மீட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.