Videos

TNPSC Gr2, Gr2A தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியீடு!

TNPSC Gr2, Gr2A தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியீடு!



குரூப் 4 தேர்வு அடுத்த மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் தகவல்.
தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் கா.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக பேசிய அவர், குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும். அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களில் தேர்வு நடத்தப்படும்.

இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்வுகள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அனைத்து தேர்வுகளும் காலை 9.30 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும். இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 32 வகையான தேர்வுகளை நடத்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.