Videos

TN Ration Job Apply Online 2022 ரேஷன் கடையில் வேலை : 6503 காலிப் பணியிடங்கள்

TN Ration Job Apply Online 2022 ரேஷன் கடையில் வேலை : 6503 காலிப் பணியிடங்கள்

விண்ணப்பிக்க திங்கட்கிழமை கடைசி நாள்

TN Ration Job Apply Online 2022 ரேஷன் கடையில் வேலை : 6503 காலிப் பணியிடங்கள்


மாநிலத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாளை மறுநாளுடன் (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் எண்ணிக்கை 6503

பதவி : விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள். விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ம் வகுப்பத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

மாவட்டம் வாரியாக காலியிடங்கள் விவரம்:


மாவட்டம் பணியிடங்கள் ஆன்லைன் லிங்க்


அந்தந்த மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இணைய பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்னர்.

விண்ணப்பிக்கும் முறை:

  • https://www.drbobo.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். நேரிலோ அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் கீழ்க்கண்டவற்றை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • விண்ணப்பதாரரின் புகைப்படம் -50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format).
  • விண்ணப்பதாரரின் கையெழுத்து - 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format)
  • விண்ணப்பதாரரின் சாதிச் சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
  • நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல்(pdf file)
  • குடும்ப அட்டை - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) (அல்லது)
  • வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (pdf file)
  • SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டண ரசீது செலுத்தியிருப்பின் அந்த ரசீது (pdf file)
(அல்லது)
  • மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தியிருப்பின் (DRB Copy of the pay-in-slip) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் - 100 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
  • மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
  • ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
  • முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) 10.
  • ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தமுறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல் / வங்கி செலான் / நேர்முகத் தேர்விற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்று 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
  • தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)
  • முன்னுரிமை கோரும் இனத்திற்கான/ இனங்களுக்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

விண்ணப்பக் கட்டணம்:

  • விற்பனையாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.150/- மற்றும் கட்டுநர் (Packers) விண்ணப்பக் கட்டணம் ரூ.100/- ஆகும்.
  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலரிடமிருந்து சான்றிதழும் மருத்துவச் சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஆதரவற்ற விதவைகள். மேலே தெரிவிக்கப்பட்டுள்ளவாறு உரிய அலுவலரிடமிருந்து சான்று பெற்றிருக்க வேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.