TNPSC Notes அறநூல்கள் - இனியவை நாற்பது
TNPSC Notes Iniyavai Narpatu. அறநூல்கள் - இனியவை நாற்பது TNPSC Group 1, Group 2, Group 4 Thirukkural Notes. TNPSC Pothu Tamil Important Notes. TNPSC Kalvi Imayam Online Study. TNPSC Free Study Materials.
இனியவை நாற்பது
- ஆசிரியர் : பூதஞ்சேந்தனார்
- பெற்றோர் : மதுரை தமிழாசிரியர்
- ஊர் : மதுரை
- காலம் : கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
- பாடல்கள் : 40 பாடல்கள்
- சிறப்புப்பெயர் : மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்
- இந்நூலில் ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துக்களை இனிமையாகக் கூறுகிறது.
- 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளது.
- கடவுள் வாழ்த்தில் சிவன், திருமால், பிரம்மா மூவரும் வணங்கப்படுகின்றனர் ("கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே”)
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதேகழறும் அவையஞ்சான் கல்வி இனிதேமயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்திருவுந்தீர் வின்றேல் இனிது
சலவரைச் சாரா விடுதல் இனிதேபுலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதேமலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்தகுதியால் வாழ்தல் இனிது
பொருள்:
- குழவி - குழந்தை
- சலவர் - வஞ்சகர்
- மயரி – மயக்கம்
- மன்னுயிர் - நிலைபெற்ற உயிர்
- கழறும் பேசும்
மேற்கோள்:
- "பிச்சைப்புக் காயினும் கற்றல் மிகவினிதே”
- "மான மழிந்தபின் வாழாமை முன்னினிதே”
- "வருவாய் அறிந்து வழங்க லினிதே”
- "ஏருடையான் வேளாண்மை தானினி(து)"