Videos

TNPSC Notes அறநூல்கள் - சிறுபஞ்சமூலம்

TNPSC Notes அறநூல்கள் - சிறுபஞ்சமூலம்


TNPSC Notes Iniyavai Narpatu. அறநூல்கள் - சிறுபஞ்சமூலம் TNPSC Group 1, Group 2, Group 4  Thirukkural Notes. TNPSC Pothu Tamil Important Notes. TNPSC Kalvi Imayam Online Study. TNPSC Free Study Materials.

TNPSC Pothu Tamil Notes

சிறுபஞ்சமூலம்

 

·        ஆசிரியர்             : காரியாசன்

·        சமயம்                  :சமணம்

·        பாடல்கள்            : கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்கள்.

 

·        மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது.

·        இவரும் கணிதமேவியாரும் ஒரு சாலை மாணாக்கராவர்.

·        ஐந்து வேர்கள்: கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, சிறுநெருஞ்சி.

·         ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துகளும் மக்கள் மனநோயைப் போக்குவன.

·        இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.

·        பெரும்பஞ்சமூலம்: வில்வம், பெருங்குமிழ், தழுதாழை, பாதிரி, வாகை முதலியனவற்றின் வேர்கள்

·         இவரை மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் அடைமொழி கொடுத்துச் சிறப்பிக்கிறது.

·        மருந்தால் பெயர் பெற்ற நூல்.

·        பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள். மூலம் என்றால் வேர் என்று பொருள். வேரால் பெயர் பெற்ற நூல்.

 

·        சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.

·         பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

·        தோல்கன்றைக் காட்டிப் பசுவைக் கறக்கும் பழக்கம் கொடியது என்று கூறுகிறது.

 

 

அறிவுடையார் தாமே உணர்வர்

"பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

 மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,

 விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு

                                                                               - காரியாசன்

 

 

 

·        அணி: எடுத்துக்காட்டு உவமையணி.

 சொற்பொருள்:

·        நாறுவ முனைப்பு, தாவா - கெடாதிருத்தல்,

பாடல் பொருள் :

·        மேதைகள் பிறர் உணர்த்தாமல் தாமே எதையும் உணர்ந்து கொள்வர்

இலக்கணக்குறிப்பு:

·        அறிவார், வல்லார் - வினையாலணையும் பெயர்கள். விதையாமை, உரையாமை - எதிர்மறைத் தொழிற்பெயர்கள்

·         தாவா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்:

·        காய்க்கும் - காய்+க்+க்+உம். காய் - பகுதி, க்-சந்தி, க்-எதிர்கால இடைநிலை, உம் - பெயரெச்ச விகுதி .

·        உரையாமை = உரை + ய் + ஆ + மை. உரை-பகுதி; ய்-சந்தி (உடம்படுமெய்), ஆ - எதிர்மறை இடைநிலை, மை - தொழிற்பெயர் விகுதி.

 

 

"கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை

எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல் பண் வனப்புக்

 கேட்டார்நன் றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு

 வாட்டான் நன் றென்றல் வனப்பு"

                                                                                   -காரியாசன்

அணி: சொற்பொருள் பின்வருநிலை அணி.

பாடலின் பொருள்:

 

·        கண்ணுக்கு அழகு                 - இரக்கம் கொள்ளல்

·        காலுக்கு அழகு                       - பிறரிடம் இரந்து செல்லாமை

·        ஆராய்ச்சிக்கு அழகு             -தமது முடிவைத் துணிந்துரைத்தல்

·        இசைக்கு அழகு                       -கேட்போர் நன்றெனப் புகழ்தல்

·        அரசனுக்கு அழகு                    - குடிமக்களை வருத்தாமல் காப்பவன் என்று உரைத்தல்.

 

சொற்பொருள்:

 

·        கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்.              

·        கிளர்வேந்தன் புகழுக்குரிய அரசன்.

·        எண்வனப்பு - ஆராய்ச்சிக்கு அழகு.

·        வாட்டான் - வருத்த மாட்டான்.

·        வனப்பு – அழகு.

இலக்கணக்குறிப்பு:

·        கண்ணோட்டம், செல்லாமை, உரைத்தல், என்றல் –தொழிற்பெயர்கள்.

·        கேட்டார், வாட்டான் - வினையாலணையும் பெயர்கள்.

 

மேற்கோள்

 

v  “நூற்கு இயைந்த சொல்லின் வனப்பே வனப்பு

v   "பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு"

v  “படைதனக்கு யானை வளப்பாகும்"

v  “சொல்லின் வனப்பே வனப்பு

v  “ குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து

 உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்

பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்

 ஏகும் சொர்க்கத்து இனிது


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.